எதிர்மறை சிந்தனையின் தோற்றமானது, மனித வரலாற்றின்
தோற்றத்திற்கு முன்பே உருவாகிவிட்டது. மனித இனத்தை படைக்கவுள்ளதை
மலக்குகளிடம் அல்லாஹூ தஆலா கூறிய போது,
அவர்களின் நிலைப்பாடு எதிர்மறையாகவே
அமைந்தது. அப்போது அல்லாஹூதஆலா தான் அவர்களை விட பூரண அறிவைக்
கொண்டிருப்பதாக மலக்குகளை அறிவுறுத்தினான்.
மனிதனைப்
படைத்த அல்லாஹ், ஆதமுக்கு கட்டுப்படுமாறு மலக்குகளுக்கு கட்டளையிடப்பட்ட
போது, இப்லீஸ் அதனை மறுக்கின்றான். ஆதமுக்குக் கட்டுப்படுவதால் தனது
அந்தஸ்தில் குறைவேற்படும் என்று அவன் கருதினான். இறுதியில் அவன்
அல்லாஹ்வின் சாபத்திற்கு உட்படுகின்றான். அவன் எதிர்மறை சிந்தனையை தன்னுள்
கொண்டிருந்ததே இதற்கான காரணமாகும்.
ஒரு அமெரிக்க
எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். உலகம் ஒரு முக
ம் பார்க்கும்
கண்ணாடி. ஓவ்வொரு மனிதனுக்கும் அவனது முகத்தின் பிரதிபலிப்பையே இவ்வுலகம்
வழங்குகின்றது.
இதன் கருத்து நாம் எம்மை எவ்வடிவில்
காண்கின்றோமோ, எந்தளவுக்கு எம்மைப் பற்றி மதிப்பீடு செய்கின்றோமோ அதுவே
எமது சிந்தனையின் வெளிப்பாடுகளையும், செயற்பாடுகளையும் நிர்ணயிக்கப்
போதுமானதாக அமைந்துவிடுகின்றது.
எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் சிறிய விடயங்களுக்காகவும்
பதட்டப்படுவார்கள். குறைவாக சிந்தித்து, வேகமாக செயற்பட்டு, கூடுதலான
பிரதிகூலங்களை அடைந்து கொள்பவர்களாகவும், சாதாரண வாழ்வில் ஏற்படுகின்ற
சவால்களை எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாகவும் காணப்படுவார்கள். அத்துடன்,
பிறருடன் இலகுவாகவும், வேகமாகவும் முரண்படும் இயல்பும் இவர்களிடம்
காணப்படும்.
ஒரு டம்ளரில் பாதி தண்ணீர் தான் உள்ளது
என்றால் அதை எதிர்மறையாக சிந்திக்காமல், குடிநீரை பருகி இறைவனை நன்றி
செலுத்தும் தன்மையும் நேர்மறையே ஆகும்.
ஒரு மனிதன்
தனது வாழ்வில் பிரச்சனைகளை, சிக்கல்களை எதிர்கொள்ளும் போது தனது
உள்ளத்திடம் 'பதட்டப்படாதே' என எதிர்மறையாகக் கூறுவதை விட 'அமைதியாக இரு'
என நேர்மறையாகக் கூறுவதானது, குறித்த பிரச்சனையிலிருந்து அவனை விடுவித்துக்
கொள்ள இலகுவாக இருக்கும்.
அவ்வாறே ஒரு மனிதனிடம்
'மறந்துவிடாதே' என்று கூறுவதை விட 'நினைவில் வைத்துக் கொள்;' எனக் கூறுவது
அவ்விடயத்தை நினைவில் வைத்துக் கொள்ளும் தைரியத்தை ஏற்படுத்தும். இது
நேர்மறையான அணுகுமுறையாகும்.
எனவே, எமது தனிப்பட்ட,
குடும்ப, சமூக வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சாவல்களை நேர்மறையாக
நோக்குவதனூடாக வாழ்வை வளமானதாக, நிம்மதியானதாக மாற்றிக் கொள்ளலாம்..
No comments:
Post a Comment