மனச்சோர்வு நோய் பற்றிய விளக்கம்
மனச்சோர்வு நோயுள்ளவர்கள் , அவர் சார்ந்த உறவினர்கள் மற்றும்நண்பர்களுக்காக இந்த தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதை படித்தவுடன் மனச்சோர்வு நோய் பற்றி தெளிவு பெற்று அதுவும் ஒரு வகையான நோய் என்று நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.
நம்மில்
பலருக்கும் அவ்வப்பொழுது மனச்சோர்வு
ஏற்படுவது இயற்கையே. இது சில மணி
நேரமோ அல்லது சில தினங்களோ இருந்து விட்டு
நம்மை அறியாமலே நீங்கி விடும்.
ஆனால் மனச்சோர்வு நோய் உள்ளவர்களுக்கு இத்தகைய
உணர்வு பல வாரங்கள் மற்றும் மாதங்கள் நீடிக்கும்.
இதனால் அவர்களின் தினசரி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும்
அலுவலக வேலை எல்லாமே பாதிப்படையும்.மனச்சோர்வு நோய்க்கான அறிகுறிகள்:
- 1. எப்பொழுதும் சோகமாக இருத்தல் ( மதியம் மற்றும் சாயந்திர வேளைகளில் இது சற்றே மாறலாம் )
- 2. வாழ்க்கை மேல் பிடிப்பு இல்லாமை .எதிலும் நாட்டம் மற்றும் மகிழ்ச்சி இல்லாமை.
- 3. சிறு விசயங்களில் கூட முடிவு எடுக்க முடியாத நிலை.
- 4. முன்பு எளிதாக செய்த வேலைகளை கூட செய்ய முடியாத நிலை.
- 5. எப்பொழுதும் உடல் சோர்வாக இருத்தல்
- 6. மனம் அமைதி இல்லாமல் சஞ்சலத்துடன் இருத்தல்
- 7. பசியின்மை. அதனால் உடல் எடை குறைதல். ( மிக சிலருக்கு அதிகமான பசி மற்றும் உடல் எடை கூடுதல் இருக்கலாம் )
- 8. தூக்கமின்மை. (தூக்கம் வருவதிற்கு அதிக நேரம் பிடிப்பது, முழு தூக்கம் கிடைக்காமல் அதிகாலை வேளைகளில் விழித்தல், முழு திருப்தி தராத தூக்கம் )
- 9. தாம்பத்திய உறவில் நாட்டமின்மை.
- 10. தன்னம்பிக்கை இல்லாமை,
- 11. தாழ்வு மனப்பான்மை, எதிர்காலத்தை பற்றிய வெறுமையான உணர்வு,
- 12. எளிதில் எரிச்சல் அடைதல்,
- 13. நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் ஆர்வம் குறைந்து தனிமையை நாடுதல்.
- 14. வாழ்வதில் நாட்டமில்லாமல் தற்கொலை எண்ணம் மிகுதல், அதற்குரிய முயற்சிகளை செய்தல்.
- 15. அடிக்கடி தலைவலி மற்றும் உடம்பு முழுவதும் வலி, குடைச்சல் --இவை கூட மனச்சோர்வு நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
உங்களுக்கு மனச்சோர்வு நோய் உள்ளது
என்பதை அறியவே பல வாரங்களோ அல்லது மாதங்களோ
ஆகலாம் .
No comments:
Post a Comment