Tuesday, November 4, 2014

நெருக்கீட்டுக்கு பிற்பட்ட மனஉளைச்சல் கோளாறு

  
 ஒரு நபரின் வாழ்க்கையில் ஏற்படும் அதிர்ச்சிகரமான அனுபவத்தினால் அல்லது சம்பவத்தினால் இந்நோய் ஏற்படகின்றது. உதாரணமாக போர் , இயற்கை பேரழிவு , கற்பழிப்பு , பிணைக்கைதியாக சூழ்நிலைகள் , சிறுவர் துஷ்பிரயோகம், கொடுமைப்படுத்துதல்  அல்லது ஒரு தீவிர
விபத்து  மூலம் ஏற்படலாம்.

இது நீண்ட கால (நாள்பட்ட  வெளிப்பாடாக மாறுகின்ற போது பாதிக்கப்பட்டவர் இந்நோய்க்குள்ளாகின்றார். இந்நோய் குறித்த நிகழ்வு தொடர்பாக ஒரு கடுமையான மன அழுத்தத்தினால் ஏற்படலாம் 

உதாரணமாக  யுத்தங்களில் ஈடுபடும் படை வீரர்கள் தொடர்ச்சியாக இடம் பெரும் யுத்தத்தினால் மன அழுத்தத்திற்குற்பட்டு இந்நோய்க்குள்ளாகலாம்.

இந்நோயின் பொதுவான அறிகுறிகள் சம்பவங்களை அடிக்கடி மீட்டிப்பார்த்தல் , தவிர்த்தல் நடத்தைகள ;, படபடப்பு  , கோபம்  மற்றும் மன அழுத்தம் , அழுதல், உணர்வுகள் மறத்து போயிருக்கும், பேச மாட்டார்கள், பொறுப்புக்களை செய்யமாட்டார்கள், கணவன் மனைவிக்கிடையே உறவு இருக்காது, பாலியல் நாட்டம் குறைவு, துக்கப் பிரச்சினை, வியர்வை, நடத்தை மாற்றம், குடும்ப வன்முறைகள் மற்றும் ஞாபக குறைவு

சிகிச்சை : அறிவாற்றல் நடத்தை சிகிச்சை – குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆதரவினை மேம்படுத்;தும் திட்டம்.

No comments:

Post a Comment