ஒரு மனிதனுக்கு சாதாரணமாக கோபம், பொறாமை, வஞ்சகம் இருப்பது இயற்கையானது ஆனால் அது அதிகரித்து மற்ற மனிதனை தாக்க அல்லது மட்டம்தட்ட நினைப்பதற்கான எண்ணங்கள் எங்கள் உள்ளத்தில் மேலிட்டால் அது உள நோயாக கருதப்படும். எப்படியெனில் உள்ளத்தோடு சேர்ந்த நியாயத்தை விட உணர்ச்சி
உதாரணமாக: ஒரு படித்தவர் எம்மிடம் வந்து நான் எப்படி வாழ்கிறேன் தெரியுமா? ஒரு நாளைக்கு நான் உழைக்கும் பணம் தெரியுமா? என்னை விட யார் படித்தவர்கள் இந்த ஊரில்? யாராவது என்னை மீறி வர விட மாட்டேன்? அவன் சமூகத்திற்கு சேவை செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவனை எப்படியும் இல்லாமல் செய்ய வேண்டும்? மக்கள் மத்தியில் அவனுக்கு இருக்கும் நற்பெயரை எப்படியும் கலங்கப்படுத்த வேண்டும்? இவரெல்லாம் பெரியாலா? என்ற வார்த்தை பிரயோகங்களை அடிக்கடி பயன்படுத்துவார்கள் இவர்களை நாம் இணங்கண்டு உளவள ஆலோசனை மற்றும் சிகிச்சைக்குற்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் "வைக்கல் கந்தில் படுக்கும் நாயாக" மாறிவிடுவார்கள் இவர்களின் அறிவினை விட உணர்ச்சிகளே அதிகரிப்பதால் இவர்களால் ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்க முடியாது. எதிர்கால சந்ததியினருக்கான வழிகாட்டலை காட்டவும் மாட்டார்கள் அதே நேரம் அவரும் முன்னேர முடியாமல் தனக்குள்ளேயே செத்துக் கொண்டிருப்பார்.
இவ்வாறு உள நோய்க்குள்ளாகின்றவர்கள் தனது நண்பர், மனைவி, குடும்பத்தினர், வேலை செய்யும் சக உத்தியோகத்தர்களிடம் "தான் இப்படி நடப்பதில்லை, எனக்கு பெருமை கிடையாது, நான் தான் பெரியவன் ஆயினும் நான் விட்டுட்டு சும்மாயிருக்கிறேன் "என்று மாத்திரமல்லாமல் மற்றவரை பற்றி தனது பொறாமை கனைகளை தொடுத்து கொண்டிருப்பார். சில நேரம் அவர் உண்மையில் உள நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதை அவர் அறிந்திருக்கமாட்டார்.
எனவே தான் எப்போது நாம் மற்றவரை தாக்க அல்லது அவமானப்படுத்த நினைத்து செயலில் இறங்கிவிட்டோமோ அப்போதே உள நோய்க்குள்ளாகி விட்டோம் என்பதை புரிந்து உடன் உளவள ஆலோசனை பெறுவதற்கு நாம் முயற்சி மேற்கொண்டால் உள ஆரோக்கியமாக நாம் வாழலாம். இல்லாவிட்டால் மனோநிலை பாதிக்கப்பட்டு ஒரே விடயத்தினை பல தடவை சொல்லிக் கொண்டிருப்போம்.
No comments:
Post a Comment