Tuesday, April 29, 2014

ஏன் தற்கொலை? தடுப்பது எப்படி?



தற்கொலைகள் செய்வதற்கான காரனங்கள் என்ன?
தாம் மிக அதிகமாக நேசித்தவரின் திடீர் மரணம், பொருளாதார ரீதியாக ஏற்படும் பின்னடைவு , குற்ற உணர்வு , சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்படுதல் , தாங்க முடியாத நோய்கள், மன நிலை பாதிக்கப்படுவது,
போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, பிறர் தூண்டுதல் தற்போதைய உலகத்தின் எல்லாவித போட்டிகளிலும் தோல்வி அடைவது அல்லது அதை கண்டு பயப்படுவது, நிறைவேறாத ஆசைகள் அதனால் ஏற்படும் ஏமாற்றங்கள், சுயகவுரவம் பாதிக்கப்படும்போது அதை காப்பற்ற என்று பல காரணங்களினாலும் தற்கொலை நடைபெறுகின்ற போதும் தொண்ணூறு வீதமான தற்கொலைக்குக் காரணம் மனநிலையில் ஏற்படுகின்ற பாதிப்புகளே என்று கண்டறியப்பட்டுள்ளது. மனபதட்டம், மனசிதைவு, psychotic என்பதான மனநோய்கள் ஏற்படுபவர்களுக்கு தற்கொலை செய்து கொள்கின்ற எண்ணம் ஏற்படுகின்றது.

தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் அதைவெளிப்டுத்துவார்களா?
தற்கொலை செய்து கொள்ளப்போகின்றேன் என்று அடிக்கடி மிரட்டிக் கொண்டிருக்கும் மிரட்டலர்கள் நிறையப் பேரும் இருக்கின்றார்கள். இவர்களை நீங்களும் சந்தித்திருப்பீர்கள். இவர்களை வாய்ச்சொல்லில் வீரர்கள் என்றும் அழைக்கலாம்

சிறிய அளவு மருந்தை குடித்து விட்டு தான் மருந்து குடித்து விட்டேன் என்று உடனேயே கூறுவார்கள். தற்கொலை செய்யப் போகின்றேன் என்று பறைசாற்றி விட்டு அறைக்குள் சென்று கதவை பூட்டுவார்கள் (எப்படியும் உடைத்து திறந்து தடுப்பார்கள் என்ற நம்பிக்கை). ஆனால் உண்மையில் தற்கொலைக்குத் துணிபவர்கள் எவருக்கும் தெரியாமல் திட்டம் தீட்டுவார்கள். தன்னை யாராலும் காப்பாற்ற முடியாத வழிகளையும், நேரத்தையும் இவர்கள் தெரிந்தெடுப்பார்கள். சிலர் மிரட்டி காரியம் சாதிக்க வேண்டும் என்றும் அடிக்கடி தற்கொலை செய்துகொள்வதாக கூறுவார்கள்.

 இது பல நேரங்களில் அதுவே ஆபத்தாக மாறிய சம்வங்களும் உண்டு . பொதுவாக தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் சாதாரனமாக பேசும் போதும் அவர்களின் தினசரி நடவடிக்கைளிலும் பல்வேறு விதங்களில் தற்கொலை எண்ணத்தை வெளிப்டுத்துவார்கள் அதை நாம் அலட்சிய படுத்தாமல் அவரை நல்ல மனநலமருத்துவரிடம் அழைத்து செல்வது சிறந்த வழிறையாகும்.


No comments:

Post a Comment