மனநோய்
என்பது
ஒரு
குறிப்பிட்ட நோய்
அல்ல.
இதற்குள் பல
வகையான
நோய்கள் உள்ளடங்குகின்றன. இந்த
மனநோய்க்குவயது பால், பொருளாதாரம், இனம் என்று
சிந்தனையிலும், நடத்தையிலும் பெரும் குழப்பத்தை இது ஏற்படுத்தும். இதன் காரணமாக சாதாரண வாழ்க்கையில் பெரும் குழப்பங்கள் உருவாகும்.
மனநோய்க்கான காரணங்கள் பல உள்ளன. பொதுவாக மூளையில் ஏற்படும் இரசாயன சமனின்மையே இந்த மனநோய்க்கான காரணமாக இருக்கலாம் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். வாழ்க்கையில் திடீரென்று ஏற்படுகின்ற அழுத்தங்கள், மரபணுக்கள் என்பன இந்த இரசாயன சமநிலையில் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கலாம்.
மனநோய்க்கான அறிகுறிகள் என்ன?
காரண காரியம் எதுவும் இல்லாமல் அழுவதும், சிரிப்பதும், தனக்குத் தானே பேசிக்கொள்ளுதல், தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருப்பது, தடால் தடால் என்று ஒரு விசயத்தை விட்டு இன்னொரு விசயத்திற்குத் தாவுவது, அதீத பயம் கவலை, என்ன வென்று விபரித்து சொல்ல முடியாத எண்ணங்கள், தற்கொலை செய்வதற்கான எண்ணம் ஏற்படுதல், அன்றாட நடவடிக்கைகளில் செயல்பட முடியாத நிலை, உணவு உண்ணுதலிலும், உறக்கம் கொள்வதிலும் சிக்கல் என்பன மனநோய்க்கான சில அறிகுறிகளாகும்.

No comments:
Post a Comment