Tuesday, April 29, 2014

மனசிதைவு ( Schizophrenia ) என்றால் என்ன?



தாழ்வு மனப்பான்மை அளவுக்கும் அதிகமாக இருக்கும். ஒருவரின் சிந்தனை, பேச்சு, உணர்ச்சி, நடத்தை யில் எல்லாம் குழப்பம்
இருக்கும். உலகம் இவருக்கு ஒரு பயமுறுத்துகின்ற இடமாகவும், குழப்பமான இடமாகவும் தோன்றும்

உண்மைக்குப் புறம்பான எண்ணங்கள் இவர்களுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும். மேல் வீட்டில் இருக்கின்றவர் தன்னைக் கொல்ல சதி செய்கின்றார்என்று திடீரெனக் கூறுவார்கள். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இவர் சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால்? மேல் வீட்டில் இருப்பவர் தன்னைக் கொல்ல ஒரு அணுகுண்டு தயாரித்துக் கொண்டு இருப்பதாக இன்னொரு கதை சொல்வார்கள்.

  இதையும் நீங்கள் நம்பாவிட்டால், ‘அப்துல் கலாம் கூட நேற்று அந்த வீட்டுக்கு வந்து போனார்என்று அடித்துக் கூறுவார்கள். அல்லதுஇந்த தபால்காரர் என்னுடைய குழந்தை கடத்துவதற்குத் தான் ஒவ்வொரு நாளும் வந்து நோட்டம் பார்க்கின்றார்என்று சந்தேகப்படுவார்கள். ஏன் அப்படி சந்தேகிக்கின்றீர்கள்? என்று கேட்டால், ‘அதான் தபால்காரர் தோளில் ஒரு பையோடு திரிகின்றாரேஎன்பார்கள்.
இவர்களுக்கு மட்டும் ஒரு குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். சில சமயம் இவர்களுக்கு மட்டும் உருவங்கள் தெரியும். இந்த உருவங்கள் இவர்களோடு பேசும் இவ்வாறு உருவங்கள் பேசும் பேசும் போது மற்றவர்களுக்கு கேட்காது. தங்களோடு மட்டுமே உருவங்கள் பேசுகின்றன என்று இவர்கள் கூறுவார்கள்.

சிலர் ஏதோ வாசைன வீசுகின்றது என்று கூறிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மட்டும் எப்போதும் ஏதோ வாசைன வீசிக்கொண்டிருக்கும். அந்த வாசைன வேறு எவருக்கும் மணக்காது. தான் உண்மையில் வேறு ஆள் என்று சிலர் நம்பத்தொடங்குவார்கள். நம்புவது மட்டுமல்ல செயல்படவும் தொடங்கி விடுவார்கள். “ நான் தான் ஜன்ஸ்டின்என்று கோப்பை. கொப்பரைகளுடன் ஒருவர் புறப்பட்டு விடுவார்.

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் யாராவது மனநோயாளராக இருந்தால் அவருக்கு உதவ முற்படுங்கள். கண்டிப்பாக அவருக்கு மருத்துவ உதவி தேவை. ஆரம்பத்திலேயே இதை குணப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் அதிகம். முற்றிலும் குணப்படுத்தக் கூடிய நவின மருத்துவமுறைகள் வந்துள்ளன அதன்மூலம் எளிதாக குணப்படுத்த முடியயும் மனநோயின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும்.


1 comment: