Saturday, June 21, 2014

கள ஆய்வு அனுபவ பரிமாறல்


அரச தொழில் புரியும்  35 வயது பெண் தன் கணவனால் வன்முறைக்கு உற்படுகின்றால், வாழ்க்கையில் தான் தனிமைப்படுத்தப்பட்டதை
உணர்ந்து கவலையால் மன அழுத்தத்திற்கு உட்படுகின்றாள் உடலாலும் உள்ளத்தாலும் கணவனால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றாள். கணவன் மனைவிக்கும் உள்ள இந்த முறன் பாட்டை தனியாள வரலாற்று ஆய்வு முறை மூலம் முதலில் ஆய்வு செய்த போது.

கணவன் சிறுவயதாக இருக்கும் போது தனது தந்தை தனது தாய்க்கு அடிப்பது வழக்கம் இதனை கண்டு கண்டு இவருக்கு சிறுவயது முதலே வன்முறை எண்ணம் உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டது. கடைசியில் இவர் இளைஞராக இருந்த போது தனது தாய்க்கும் தந்தைக்கும் அடிப்பது வழக்கமாக மாறிவிட்டது.

இக்கட்டத்தில் தான் இந்த பெண்னை இவர் விரும்பி திருமணம் செய்து கொண்டார். மனைவியின் தனியாள் வரலாற்று ஆய்வினை பார்க்கும் போது இவர் அவரது பெற்றோரால் பெறாமல் வளர்க்கப்பட்டவராவார். வாழ்க்கையில் பல சிரமங்களுக்கு மத்தியில் கற்று பட்டபடிப்பினை முடித்தவரும் கூட.
 
பிரச்சினைக்கான காரணத்தினை பார்க்கின்ற போது:-
 தனது கணவனால் அடிக்கடி வன்முறைக்கு உட்படுத்தப்படுவதால் கணவனின் உறவினர் ஒருவரிடம் குறுந்தகவல் மூலம் பிரச்சினையை தெளிவுபடுத்தி  ஆறுதல் பெறுவது வழக்கம் ஒரு நாள் டயலோக் விபரப்பட்டியல் வந்தபோது அது கணவனின் கையில் கிடைக்கப்பெற்றதும் அவர் அதிகமாக தனது உறவினருக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டதை அறிந்து சந்தேகம் கொண்டு தன் மனைவி இறக்கும் அளவுக்கு அடித்தார் இதனால் உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார்.

 மனைவியின் உளப்பகுப்பாய்வினை பார்த்த போது திருமணம் முடித்து 13 வருடம் ஆகியும் தனது கணவர் தன்னுடன் உடலுறவு கொள்ளவில்லை என்பது தெரிய வந்தது இதனை மருத்துவ பரிசோதனை மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. கணவனின் உளப்பகுப்பாய்வினை ஆய்வு செய்த போது மனையின் அருகில் செல்வதற்கு முதலே தனது இந்திரியம் வெளிப்படுவதால் அவரால்மனைவியுடன் உடலுறவுகொள்ள முடியவில்லை.

 நனவிலி மனதில் ஒரு பிரச்சினையும் வெளிப்படையாக வேறு பிரச்சினையும் இவ் கள ஆய்வில் அறிந்து உண்மையான பிரச்சினையை உளவியல் ஆய்வு அனுகுமுறை மூலம் அறியப்பட்டது.

No comments:

Post a Comment