விமர்சனம் என்பது என்ன வென்று முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் 'ஒரு அமைப்பு அல்லது நிறுவனம் தனது இலக்கு ,கொள்கை, நோக்கத்திற்கு மாறாக செல்கின்ற போது அவ்வமைப்பை அல்லது அந்நிருவனத்தை நாம் விமர்சிக்கலாம் எப்படியென்றால் அவர்களின் கொள்ளை
கோட்பாடுகள், நோக்கங்களை ஞாபகமூட்டி அதன் அடிப்படையில் நீங்கள் செல்லத்தவறி விட்டீர்கள் அதற்கான காரணங்கள் இவைகள் தான் என குறித்துக்காட்டுவதன் மூலம் எமது ஆக்கவூர்வமான விமர்சனத்தினை முன்வைக்கலாம்.
அதேபோல ஒரு கணித பாட ஆசிரியரை விமர்சிக்க வேண்டும் என்றால் முதலில் அவர் கணிதப்பாடம்தான் கற்பித்து கொடுகின்றார் விஞ்ஞானப் பாடமில்லை என்பதை விளங்கிக் கொள்கின்ற திறன் எமக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவருடைய கற்பித்தல் தொடர்பாக எமக்கு சிறப்பாக விமர்சனம் செய்ய முடியும். அவரும் தன்னை மீள்பரிசிலனை செய்வதற்கு உதவியாக இருக்கும். அவர் விஞ்ஞானப்பாடம்தான் கற்பிக்கின்றார் என பிழையாக விளங்கி விமர்சனத்தை மேற்கொண்டால் ஆசிரியருக்கும் பிரயோசனமில்லை விமர்சித்தவருக்கும் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.
நான் சமூப்பணியில் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உழைப்பவன் எல்லோருக்கும் தெரியும் என்னைவிமர்சிப்பவர்கள் எந்த வட்டத்தினுள் நின்று விமர்சித்தால் பொருத்தமானது என்பதை விளங்கி விமர்சனம் செய்ய பழகவேண்டும். அப்படியென்றால் கல்வி என்ற வட்டத்தினுள் நின்றுதான் உங்கள் விமர்சனங்களை மேற்கொள்ளலாம்.
உதாரணமாக "கல்முனையில் கல்வி வீழ்ச்சியடைந்து செல்கின்றது உங்களைப்போன்றவர்கள் என்ன செய்கின்றீர்கள், சுயநலம் பாராது பொது நலத்தோடு சமூக முன்னேற்றத்திற்காக வேலைசெய்யுங்கள்" என்று விமர்சிக்கலாம். இவ்விமர்சனம் நியாயமானது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்னையும் ஒரு கனம் மீள்பரிசிலனை செய்யத் தூண்டும் தவறை ஏற்றுக் கொண்டு என்னால் முன்பைவிட கூடிய கவனம் செலுத்தக்கூடியதாக அமையும். ஆனால் நான் என்ன செய்கின்றேன் என்பதை ஒருவர் பிழையாக விளங்கி இப்படி விமர்சிக்கிறார் ' நாடு பத்தி எரியுது உங்களுக்கு விளையாட்டா? என்று விமர்சிக்கின்றார்
என்றால் அந்த விமர்சனம் உண்மையில் சமூக பொருப்பு வாய்ந்த அரசியல் அதிகாரமுடையவர்களிடம் கேட்கும் கேள்வி அல்லது விமர்சனமாகும்.
இவர் விமர்சித்தது என்னைவிட ஒரு அரசியல் வாதிக்கே பொருத்தமான விமர்சனமா இருக்கும். எனவேதான் ஒவ்வொருத்தரும் சமூகத்தில் எந்த பொறுப்பு வகிக்கின்றார்கள் என்பதை நன்கு தெளிவு பெற்றபின் விமர்சனத்தை ஆக்கவூர்வமாக மேற்கொள்ள வேண்டும். நாம் விமர்சித்தால் அவர் மீள்பரிசிலனை செய்து அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடியதாக இருக்க வேண்டும்.
இஸ்லாத்தை பற்றி ஒருவர் விமர்சிக்க வேண்டுமானால் முதலில் இஸ்லாம் என்றால் இதுதான் என்பதை விளங்கி தெளிவுக்காக விமர்சிக்கலாமே தவிர குரோதம் வஞ்சகம் பொறாமை கொண்டு விமர்சிக்க முடியாது உதாரணமாக : முஸ்லிம்கள் எத்தனை பெண்களையும் வைத்துக்கொள்ளலாம். இந்த விமர்சனத்தை முஸ்லிம்களான எம்மால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் விமர்சிப்பவருக்கு இஸ்லாத்தை பற்றி அதன் திருமண சட்டங்கள் பற்றி தெரியாது.
இதைபோலத்தான் எமது விமர்சனங்களை ஆக்கவூர்வமாக அமைத்து உணர்ச்சி வசப்படாமல் பக்குவமாக விமர்சிக்க்கும் முறைகளை கற்றுக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment