Thursday, June 5, 2014

சமூக இணையத் தளங்களைத் தொடர்ச்சியாகப் பாவித்தல் நமது மன ஆளுமையைச் சிதைத்து மருட்சியையும் விளைவிக்கும்

சமீபத்தில் இஸ்ரேல் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப் பட்ட ஆய்வொன்றின் மூலம் ஃபேஸ்புக் மற்றும் ஏனைய பிரபல சமூக இணையத் தளங்களைத்
தொடர்ச்சியாகப் பாவித்தல் நமது உள சுகாதாரத்தைப் பாதிப்பதுடன் மன ஆளுமையைச் சிதைத்து மருட்சியையும் விளைவிக்கும் என எச்சரிக்கப் பட்டுள்ளது.

நிகழ்காலத்தில் இணையப் பாவனை அனைத்துத் தரப்பினரிடையும் அதிகரித்து வருகின்றது, இதனால் உளவியல் நோய்களும் இணைய மன அடிமைத்தனமும் தொழிநுட்பம் மற்றும் காட்சித் திறன் தொடர்புகளால் மிகைப்பட்ட பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நவீன உலகில் குடும்பங்களைப் பிரிந்து வெளிநாட்டில் வாழ்பவர்களும் கல்வி கற்பவர்கள் மற்றும் வேலை செய்ப்வர்களும் கணணித் தொடர்பாடலில் அதிகளவு ஃபேஸ்புக் மற்றும் சேட்டிங் குழுக்களைப் பாவிப்பதனால் வித்தியாசமான மனநிலை உடையவர்களாகவும் தனிமை உணர்வு மிக்கவர்களாகவும் இலகுவில் உணர்ச்சிவசப்பட அல்லது கவலை கொள்பவர்களாகவோ இருக்கின்றனர் எனக் கூறப்படுகின்றது. இத்தகவலை டெல் அவிவ் மருத்துவ மற்றும் மனவள பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் யூரி நிட்ஷான் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இவர் மேலும் கூறுகையில் இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படும் போதும் இதில் ஓர் நற்செய்தியும் உள்ளது என்றார். அதாவது ஏனைய தீவிர மனவியல் வியாதிகளைப் போன்றல்லாது, இதில் பாதிக்கப் பட்டவர்கள் மனநல ஆலோசகரிடம் முறையான அறிவுரையைப் பெற்று தங்கள் பழக்கங்களைச் சிறிது மாற்றிக் கொண்டால் இப் பாதிப்புக்களில் இருந்து வெளியே வந்து விட முடியும் என்றார். இணையத்தில் அதிகரித்துள்ள இந்த வசதிகள் மூலம் எந்தளவு நண்மை உள்ளதோ அதேயளவு பிரதி விளைவுகளும் உள்ளன என்றும் தெரிவிக்கப் பட்டுள்ள இந்த ஆய்வு இஸ்ரேலின் மனநல மற்றும் இதனுடன் தொடர்புடைய விஞ்ஞானங்கள் குறித்த பத்திரிகையிலும் வெளிவந்துள்ளன.

No comments:

Post a Comment