ஒரு நொடிப்பொழுது எடுக்கக்கூடிய முட்டாள்தனமான முடிவு
தன்னம்பிக்கையே வாழ்க்கையில் நம்மை அடுத்த உயரத்துக்கு அழைத்துச் செல்வது..
“தற்கொலை செய்துகொள்வதற்குவலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்? வாழ்ந்துதான் பாரேன்..” என்ற தன்னம்பிக்கை வரிகள் சிந்திக்கத்தக்கன.
ஒரு பையனை ரொம்ப நாளாக் காணோம்..
ஏம்பா என்ன ஆச்சு இவ்வளவு நாளா எங்கே போனாய் என்று கேட்டேன்.
அதை ஏங்கய்யா கேட்கறீங்க..
நான் செய்யாத தப்புக்கு எல்லோரும் என்னைப் பலிசுமத்துனாங்க..
என்னை யாருமே நம்பல..
நான் தற்கொலைக்கு முயற்சித்து. பூச்சி மருந்த குடிச்சிட்டேன்.
மருத்துவமனையில் வைத்துக் காப்பாற்றிவிட்டார்கள்..
அதனாங்கய்யா மருத்துவமையிலேயே ஒருவாரம் இருந்தேன்..
என்றான்அடப்பாவி..!!
சாகிற வயசாடா இது என்று சில அறிவுரைகள் சொல்லி அனுப்பினேன்.
ஒரு நொடிப்பொழுது எடுக்கக்கூடிய முட்டாள்தனமான முடிவுதான் இது. அந்த தற்கொலை என்னும் எல்லை வரை சென்று திரும்பியவனால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கமுடியும் என்று நம்புபவன் நான். அவர்களை சரியான வழியில் திசை திருப்பிவிடவேண்டும் அவ்வளவுதான்.
அது பெற்றவர்களைவிட,
உடன்பிறந்தவர்களைவிட நண்பர்களால்தான் முடியும்!! சரி தற்கொலை தொடர்புடைய இரண்டு சிந்தனைகளை இன்று இடுகையாக தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
சிந்தனை ஒன்று...
ஒரு முயல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாம். ஆம் முயல் என்ன செய்யும் பாவம்!!
ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான்.
இன்னொரு பக்கம் நாய்.
மறுபக்கம் புலி..
என எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிரிகள்.
சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது. இறுதியாக..
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல்.
அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின.
முயல் சிந்தித்தது...
அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா?? என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்ந்ததாம்.
சிந்தனை இரண்டு..ஒருவன் வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவில் இரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்திருந்தான்.
நம்ம ஊரு தொடர்வண்டி என்று சரியான நேரத்துக்கு வந்தது.?அப்படி படுத்திருக்கும்போது எங்கோ ஒலிபெருக்கியில் யாரோ பேசுவது இவன் காதில் கேட்டது.
தொடர்வண்டிக்காகக் காத்திருக்கும் நேரத்துக்கு அந்த சொற்பொழிவைக் கேட்டுவரலாம். அப்போது வண்டி வர நேரம் சரியாக இருக்கும் என்ற முடிவெடுத்து அந்தப் பேச்சைக் கேட்கச் சென்றான்.
சொற்பொழிவைக் கேட்டவன். தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டான்.
அவன் மனதில் நினைத்துக்கொண்டான்.
பொருளே இல்லாம இவ்வளவு நேரம் பேசும் இந்தச் சொற்பொழிவாளன் உயிரோடு இருக்கிறான்.. ஒன்றுமே புரியாவிட்டாலும் கைதட்டிப் பாராட்டும் இத்தனை மக்களும் உயிரோடு இருக்கிறார்கள்....!!! நான் மட்டும் ஏன் வாழக்கூடாது!!என்று தன்னம்பிக்கையோடு வீடு நோக்கி நடந்து செல்கிறான்.
No comments:
Post a Comment